Sunday, December 17, 2006

உண்மையான தேவைகள்

சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் கிராமத்து இளைஞர்கள் இருவரின் முயற்சியால் துவக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இன்றும் சுற்றுப்புற கிராமங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிவருகிறது.

அந்த இளைஞர்கள் இதற்காக பட்ட துயரங்கள் ஏராளம். அதில் ஒரு இளைஞரின் தலைமையில் சங்கம் பல ஆண்டுகள் குறிப்பிட்ட லாபம் பெற்று ஆண்டுதோறும் பொங்களுக்கு முன் லாபத்தொகை பிரிக்கபட்டு ஒவ்வொரு அங்கத்தினருக்கும் ஆண்டுமுழுதும் வழங்கிய பாலுக்கு கணக்கிடப்பட்டு போனசாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையை அடைய அவரின் தீவிர முயற்சியும், கடின உழைப்பும்,தன் உழைப்பை முழுக்க முழுக்க இதற்காகவே அர்பணித்த உள்ளமும் உண்மையில் போற்றத்தக்கவை.இடையில் சிலமுறை அரசாங்கம் நள்ளிரவில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைத்து விட்டு கட்சிக்காரர்களை பதவியில் அமர்த்திய நிலையிலும் இன்றும் இச்சங்கம் சிறிதும் தளராமல் நாள் ஒன்றுக்கு சுமார் 1000 லிட்டர் பால் உற்பத்தி செய்யபடும் சிறப்பான நிலையில் உள்ளது.

இத்தனை சிறப்பு வாய்ந்த நிலையிலும் சுமார் 1000 கால்நடைகளையும் , 5000 மக்கள் தொகையும் கொண்ட இக்கிராமத்து மக்களின் நீண்ட நாள் கனவான ஒரு முழு நேர கால்நடை மருத்துவமனை இன்னமும் இக் கிராமத்துக்கு கிடைக்கவில்லை என்பது வேதனைதான்.

கிராமங்களின் உண்மையான தேவைகள் என்ன? என்று கவலைப்படாத அதிகாரிகளும்,மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளும் இருந்தும் என்னபயன்?

1 comment:

Santhosh said...

நீங்க சொல்லி இருப்பது ரொம்ப சரிங்க. கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு அப்படின்னு மட்டும் சொல்லிக்கொண்டு இருக்காமல் அவற்றின் முதுகெலும்புகள் உடையாமல் பாதுகாக்க வேண்டிய கடமை எல்லாருக்கும் இருக்கிறது.

//கிராமங்களின் உண்மையான தேவைகள் என்ன? என்று கவலைப்படாத அதிகாரிகளும்,மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளும் இருந்தும் என்னபயன்?//
நச் வரிகள். உங்க பதிவுகளை படிக்கும் பொழுது உங்களுக்கு கிராமங்களின் மீதான அக்கரை தெரிகிறது. நீங்க இதை தொடர்ந்து செய்து கொண்டு வர வேண்டும்.